கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல மாமன்றக் கூட்டம்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம் , உதவி நகரமைப்பு அலுவலர் குமார் , நிர்வாக பொறியாளர் சுந்தரராஜன் , மண்டலக் குழு தலைவர் தீபா இளங்கோ , மண்டல சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்கள் மறு கட்டுமானம் செய்யும் பணிகளுக்கு செயல் வடிவம் பெற்றுள்ளதற்கு முதல்வருக்கும் , தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி , பரிந்துரை செய்த தமிழக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம் எல் ஏ-க்கும், சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் அடுக்கு மாடி குடியிருப்புகள் உரிமையாளர்களின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கிழக்கு மண்டலத்தில் அரசு நிலங்களில் தனியார் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் உதவி நகரமைப்பு அலுவலர் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் ஏற்கெனவே பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளபடி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட திட்ட சாலை பணிகளில் ஒன்று கீதாஞ்சலி ஸ்கூல் ரோடு மற்றொன்று ஜெகநாதன் நகர் திட்டசாலை பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது
இக்கூட்டத்தில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கட்டுமானப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் , பணிகள் முடிவடையும் காலம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு , சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப் பட்டது. கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் புதிய ஒப்பந்த பணிகள் உடனடியாக தொடங்குவதற்கு உதவி பொறியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் நவீன் குமார் , பொன்னுசாமி, விஜயகுமார். கே, சரஸ்வதி , மணியன், கோவை பாபு , பூபதி. ர, கீதா. சே, அம்சவேணி. ம, மோகன். மே. தூ, பாக்கியம். எஸ், தர்மராஜ். த, சாந்தாமணி. ப, மு. சிவா , மற்றும் உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், உதவி பொறியாளர்கள், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu