கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள்: நபார்டு மூலம் ரூ.30,125 கோடி கடன் வழங்க இலக்கு
நபார்டு 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த திட்ட அறிக்கையை வெளியிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்
கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள நபார்டு வங்கி மூலம் ரூ. 30 ஆயிரத்து 125 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட முன் னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி. அமுல்கந்த சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை வகித்து 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த திட்ட அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி பணியில் நபார்டு வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல் களை சேகரித்து ரூ.30 ஆயி ரத்து 125 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வங்கி கடன் விவசாயத்தில் நீண்ட காலக்கடன் வழங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி அதை லாபகரமான வளம் சார்ந்த தொழிலாக மாற்ற உதவும்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக் கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சி திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் சுயதொ ழில் தொடங்க வங்கி கடன் வழங்கப்படுகிறது. அரசால் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை தொழில் முனைவோர் பயன்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பழங்குடியின மக்கள், ஆதிதிராவிட மக்கள், மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் சமூகத்தில் உள்ள சாதாராண மக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர் சமீரன்.
இதில், பயிற்சி ஆட்சியர் சௌமியா, மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலராவ், தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நபார்டு வங்கியின் தமிழகத்துக்கான திட்ட இலக்கு ரூ. 4.13 லட்சம் கோடி...
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்திருக்கும் தமிழ்நாட்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கை 2022-23-ஐ தமிழக அரசின் நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 14-12-2021 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில கடன் கருத்தரங்கில் வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் 2022-23ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைத் துறை கடன் ரூ. 4.13 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நபார்டு தமிழக மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் தி. வெங்கடகிருஷ்ணா தெரிவித்தார் . இது 2021-22ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டை விட (ரூ. 3.43 லட்சம் கோடி) 20% அதிகமாகும். இதில், விவசாயத் துறைக்கு கடன் ரூ. 1.43 லட்சம் கோடியும் (44%), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ. 1.31 லட்சம் கோடியும் (32%), இதர துறைகளுக்கு ரூ. 0.99 லட்சம் கோடியும் (24%) அடங்கும்.
இவற்றை தவிர, பல துறைகளில் உள்ள உள்கட்டமைப்பு தேவைகளையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. கிராமப்புற உள்கட்டமைப்புக்கு நிதி வழங்குதலில் நபார்டு வங்கியின் பங்களிப்பையும், மாநிலத்தில் உள்ள மற்ற வங்கிகள் அதிகப்படியான கடன் வழங்கியதையும் பாராட்டிய நிதி அமைச்சர் சமுதாயத்தில் உள்ள அமைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் நுண்கடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu