கோவை மாவட்ட ஆட்சியர் பயிற்சித் திட்டம்: ஜூலை 18 -க்குள் விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்
கோவை மாவட்ட ஆட்சியர் பயிற்சித் திட்டத்துக்கு கோவை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், இளம் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வத்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த உயரிய நோக்கத்தினை மாணவர்கள் இளம் ஆர்வலர்கள் இடையே வளர்ப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் (District collector internship program) தொடங்கப்பட்டு 45 நாட்கள் குறுகிய காலப் பயிற்சி மற்றும் 6 மாத காலப் பயிற்சி என இரண்டு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது குறுகிய காலப் பயிற்சியின் முதல் அணியினர் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்..
இதனைத் தொடர்ந்து குறுகியகால படிப்பிடைப் பயிற்சி, இரண்டாம் அணி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளதாகவும் இதில் சேர விண்ணப்பிப்பது தொடர்பாகவும் இதர விவரங்கள் குறித்தும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் இணையதன முகவரியான http: //coimbatore. nic. in ல் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சி திட்டத்திற்கு ஆன்லைள் மூலம் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அதே சமயம் இந்த படிப்பிடை பயிற்சித் திட்டமானது முற்றிலும் கல்வி சார்ந்த நோக்கத்திற்காக மட்டும் வழங்கப்படுகிறது இப்பயிற்சிக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் கிடையாது எனகோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu