/* */

தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கும் கோவை மாநகராட்சி அதிகாரிகள்

தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க கோவை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கும் கோவை மாநகராட்சி அதிகாரிகள்
X

புகார் அளிக்க வந்த தாய் மற்றும் மகன்.

கோவையில் வழக்கறிஞராக இருப்பவர் புகழேந்தி. இவரது தந்தை இளங்கோவன் மற்றும் தாயார் அல்லி ஆகியோர் கோவை மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை அளிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தாயாருடன் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து புகழேந்தி கூறுகையில், தனது தாய் மற்றும் தந்தையார் இருவரும் கோவை மாநகராட்சி 82 வது வார்டில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதாகவும், இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தார். இது குறித்து கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் கிரிஜா என்பவரை அணுகிய போது, இது தங்களுக்கு தெரியாது என கூறிவிட்டதாகவும் இடைத்தரகர்ர்கள் மூலம் அதற்கான பணிகளை முடித்துவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்தால் மேற்கொண்டு பணிகளை செய்வோம் என தெரிவித்ததாகவும் அதற்கு 20 ஆயிரம் அல்லது அதற்கும் மேல் செலவாகும் என அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிவித்தார். இதுகுறித்து உயர் அதிகாரியான மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமரனிடம் தெரிவிக்க சென்றால், தங்களை நீண்ட நேரமாக காக்க வைத்தது மட்டுமில்லாமல் தங்களை கண்டு கொள்ளாமல் சென்று விட்டதாக தெரிவித்தார்.

தனது தாய் மற்றும் தந்தைக்கு வரக்கூடிய ஓய்வூதிய தொகையைக் கொண்டு அவர்களது மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்ள இயலும் என தெரிவித்த அவர் இந்த தொகை கிடைக்காததால் பெரும் சிரமமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் தனது தந்தையார் நடக்கக்கூட இயலாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், இப்படிப்பட்ட நேரத்தில் அதிகாரிகள் மிக அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

எனவே மாநகராட்சி ஆணையாளர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை விரைந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கிரிஜா மற்றும் செந்தில்குமரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இடைத்தரகர்கள் மூலம் செல்லும் பொழுது அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட தொகை செல்வதாகவும் கூறினார்.

Updated On: 13 Feb 2024 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு