சூயஸ் நிறுவனத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் ; மாநகராட்சி ஆணையாளர் அதிரடி

சூயஸ் நிறுவனத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் ; மாநகராட்சி ஆணையாளர் அதிரடி
X

Coimbatore News- மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்

Coimbatore News- மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்திய எதையும் சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் சூயஸ் நிறுவனத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன், ரூ.3,167 கோடிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 31 ல் சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கோவை மாநராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கடந்த 3 ம் தேதியன்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிதளம் இடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளால் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில், தகுந்த பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை மந்தமாக மேற்கொண்டு வந்தது, சாலைகளை மறு சீரமைப்பு செய்யாதது உள்ளிட்ட மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்திய எதையும் அந்த நிறுவனம் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நோட்டீஸ் வழங்கினார். மேலும் பத்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா