கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

கோவையில் சிஐடியு தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நல வாரிய வெப்சைட் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய வெப்சைட் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து கோவையில் சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு கட்டுமான மற்றும் அமைப்பு சாரா சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் ஆன்லைன் சர்வர் முடக்கத்தால் இரண்டு மாத காலமாக நல வாரிய பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் ஓய்வூதியம் என எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் இதர துறைகளின் சர்வர்கள் மட்டும் சரியாக இயங்கும் போது கட்டுமான நல வாரிய ஆன்லைன் சர்வர் மட்டும் ஏன் சரியாக செயல்படுவதில்லை? 2022 ஆம் ஆண்டு மட்டும் பத்து முறைக்கும் மேல் சர்வர் முடக்கப்பட்டது ஏன்? கட்டுமான தொழிலாளிக்கு ஓய்வூதியம் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பணப்பயன்கள் கொண்டு போய் சேர்க்க தடை செய்வது எதனால்?,

விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் ஆன்லைன் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மறைந்து போனது எப்படி? மீண்டும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யச் சொல்லி தொழிலாளர்களை அலைய வைப்பது ஏன்? 2 மாதங்களாகியும் முடங்கிய ஆன்லைன் சர்வர் எப்போது முழுமையாக செயல்படும்? என்ற கேள்விகள் ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்டன.

மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்த வேண்டும், வாரிய கூட்டம் முடிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்தி அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். வீடு கட்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கிட வேண்டும். நிலம் இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!