சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து டாக்டரிடம் ரூ. 40 லட்சம் மோசடி

சி.பி.ஐ அதிகாரிகள் போல நடித்து டாக்டரிடம் ரூ. 40 லட்சம் மோசடி

Coimbatore News- கோவையில் டாக்டரிடம் ரூ. 40 லட்சம் மோசடி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார். 

Coimbatore News- சி.பி.ஐ. அதிகாரிகள் போல நடித்து, கோவையை சேர்ந்த டாக்டரிடம் ரூ. 40 லட்சம் மோசடி நடந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (70). மருத்துவரான இவர், எலும்பு முறிவு கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு அழைத்து பேசிய மர்ம நபர் டெல்லியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு பார்சல் வந்து உள்ளது. அதில் போதை பொருள் அனுப்பி உள்ளனர். அது குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட மற்றொருவர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என்று தெரிவித்ததுடன், உடனே டெல்லிக்கு வந்து போதைப் பொருள் சம்பந்தமாக விளக்கம் தர வேண்டும், இல்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனக்கு யாரும் போதை பொருள் அனுப்ப வாய்ப்பில்லை என தனது விளக்கத்தை அளித்து உள்ளார். தொடர்ந்து பேசிய மர்ம நபர்கள், உங்களது வங்கிக் கணக்கில் இருப்பு தொகை எவ்வளவு உள்ளது? என கேட்டு உள்ளனர். உடனே சந்திரசேகர் ரூ. 40 லட்சம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மர்ம நபர்கள் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 25 ஐ அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் மீது குற்றமில்லை என நிரூபித்த பின்பு அந்த பணத்தை நாங்களே உங்களது வங்கி கணக்கில் திருப்பி செலுத்தி விடுவோம் என தெரிவித்து உள்ளனர்.

இதனை நம்பிய சந்திரசேகர் 39 லட்சத்து 74 ஆயிரத்து 25 ரூபாயை அனுப்பி உள்ளார். பின்னர் பல நாட்கள் கழித்தும் அவரது வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சந்திரசேகர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story