கோவை ஓட்டலில் மது போதை நடன நிகழ்ச்சியில் தகராறு: இளைஞர் மீது தாக்குதல்

கோவை ஓட்டலில் மது போதை நடன நிகழ்ச்சியில் தகராறு: இளைஞர் மீது தாக்குதல்
X

காட்டூர் காவல் நிலையம் (கோப்பு படம்)

கோவை நட்சத்திர ஓட்டலில் மது போதை நடன தகராறில் இளைஞரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை காந்திபுரம் பார்க் கேட் அருகே பார்க் எலான்சா என்ற நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரங்களில் மது போதையில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகமாக நடனமாடும் வசதி கொண்ட அரங்கம் உள்ளது. நடனமாடுபவர்கள் அத்துமீறி நடந்து கொள்ளாமல் இருப்பதற்காக இங்கு பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இங்கு கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த பாலா ஹரி விக்னேஷ் (22) என்ற வாலிபர் தனது நண்பர் அபிலேஷ் உடன் சென்று உள்ளார். பாலா ஹரி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் மது போதையில் நடனம் ஆடி உள்ளனர். அப்போது அங்கு நடனமாடிக் கொண்டு இருந்த மற்றொருவருடன் பால ஹரி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் இடையே தகராறு ஏற்பட்டது.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர் செக்யூரிட்டி மேனேஜர் ராஜேஷ் கண்ணன் என்பவர், பாலா ஹரி விக்னேஷை தடுத்து நிறுத்தி அங்கு இருந்து மற்ற பவுன்சர்கள் உதவியுடன் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு வைத்து பாலா ஹரி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அபிலாசை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். அங்கு இருந்த உருட்டு கட்டையால் பாலா ஹரி விக்னேஷை சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். பின்னர் காயமடைந்த பாலா ஹரி விக்னேஷை அவரது நண்பர் உள்ளிட்டோர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து பாலா ஹரி விக்னேஷ் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் பவுன்சர் செக்யூரிட்டி மேனேஜர் ராஜேஷ் கண்ணன் மற்றும் பவுன்சர்கள் அரவிந்த், ராஜா, சிவா, மணி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!