கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு
கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசலில்நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழா
கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளி வாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்கள். உடன் உதவி ஆணையர் பாண்டியன், கடைவீதி காவல் ஆய்வாளர் லதா, வெரட்டையால் காவல் நிலையம் ஆய்வாளர் சசிகலா, மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தலைவர் அமானுல்லா தலைமையில் நடைபெற்றது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைமை இமாம் இப்ராஹிம் பார்கவி சிறப்புரையாற்றினார். முன்னிலையில். செயலாளர் பீர்முகமது, துணைத் தலைவர்கள் சையது உசேன், ஷாகுல் ஹமீது, பொருளாளர் அன்வர், முத்தவல்லி ஜாபர்அலி, செயற்குழு உறுப்பினர்கள் ஆசிக் அகமது, முகமது சபீக், முகமது யூசுப், ஷாஜகான், இதயத்துல்லா, முகமது இப்ராஹிம், நிஜாமுதீன், மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டார்கள்.
உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நோன்பை மரியாதைக் குரிய அடையாளமாகவும், தங்களை தூய்மைப் படுத்த அல்லாவின் கருணையை பெறவும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதி காலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இத்தகையை நோன்பு இருப்பார்கள். சூரிய உதயத்திற்கு முன் மட்டும் உணவு சாப்பிடுகிறார்கள். இதனை சஹர் என்பார்கள்.
அதன்பிறகு முழுநாளும் உணவு, தண்ணீர் இன்றி நோன்பு இருப்பார்கள். அதன்பிறகு மாலையில் நோன்பை முடித்து உணவு எடுத்து கொள்வார்கள். இந்த உணவை இப்தார் என்பார்கள். இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் வளர் பிறை நிலவின் பிறை தோன்றிய பின், அதை வைத்து ரமலான் தேதி அறிவிக்கப்படும். இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ரமலான் நோன்பு தொழுகை தொடங்கியது. அத்துடன் அதிகாலை முதல் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். வரும் 22 -ஆம் தேதி தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu