கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் சோதனை..!

கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் சோதனை..!
X

ஸ்டேன்ஸ் பள்ளி 

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி தான் என போலீசார் தெரிவித்தனர்.

கோவை அவிநாசி சாலையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று காலை இ மெயிலில் , பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பள்ளி நிர்வாகம் இது குறித்து மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கோவை காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் சோதனையில் ஈடுபட்டனர். மாணவர்கள் அனைவரும் வகுப்புறையில் இருந்து வெளியேற்றப்பட்டு பள்ளி மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர்.

லீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இதில் எந்த விதமான பொருட்களும் கைப்பற்றபிப் படவில்லை . போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. துணை ஆணையர் கணேஷ் தலைமையிலான போலீசார் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில் சோதனைகளில் ஈடுபட்டனர்.ஸ்டேன்ஸ் பள்ளி, நகரில் உள்ள பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். இந்தப் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் கோவை மாநகரில் 3 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸ் சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. இந்நிலையில் அதே போன்றதொரு மிரட்டல் ஸ்டேன்ஸ் பள்ளிக்கு கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி தான் என போலீசார் தெரிவித்து இருப்பதாகவும் பள்ளிக்கு வந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!