தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை
X

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை 

ஹோட்டலில் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

கோவை பந்தைய சாலையில் உள்ள கே.ஜி மருத்துவமனை சார்பில் புத்தக வெளியீட்டு விழா மற்றும் முன்னாள் துணை குடியரசு வெங்கையா நாயுடுவிற்கு விருது வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் வெங்கையாநாயுடு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிலையில் விழா இன்று நடைபெற்ற நிலையில் நேற்று குறுஞ்செய்தி வாயிலாக ரெசிடென்சி ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலிசார் ஹோட்டலில் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி எனவும் இதே போன்று கோவையில் மேலும் இரண்டு தனியார் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த குறுஞ்செய்தி கிருத்திகா உதயநிதியின் பெயரில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் அந்த நட்சத்திர விடுதியில் முன்னால் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்ட தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி, நடிகை சினேகா கலந்து கொண்ட தனியார் துணி கடை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!