கோவையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை
Coimbatore News- கோவையில் வெடிகுண்டு சோதனை
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை பிரசித்தி பெற்ற கோனியம்மன் திருக்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மற்றும் வெடிபொருட்களை கண்டறியும் கருவிக் கொண்டு கோவில் வளாகத்தை சுற்றிலும் சோதனை செய்தனர். வருகின்ற 26 ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக முக்கியமான திருத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருவதாக காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கென 4 தனிப்படைகள் அமைத்து கோட்டை ஈஸ்வரன் கோவில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவை மத்திய ரயில் நிலையம், வடகோவை ரயில் நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், டவுன் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், ப்ரூக்ஃபீல்டு மால், ஃபன் மால், பிரசோன் மால், பூ மார்க்கெட், வ.உ.சி பூங்கா, ஐ லவ் கோவை பார்க், வாலாங்குளம் பூங்கா, கோவை அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் அதிகமாக கூடக் கூடிய திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் ஆகிய பகுதிகள் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu