புரோட்டாவிற்கு சால்னா கேட்டு ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்..!

புரோட்டாவிற்கு சால்னா கேட்டு ஹோட்டல் உரிமையாளர் மீது  தாக்குதல்..!
X

ஆபிதா பிரியாணி கடை

பிரியாணி கடைக்கு சென்ற இருவர் புரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டு தகராறு செய்துள்ளனர்.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலைப் பகுதியில் பல்வேறு பிரியாணி உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆபிதா என்ற பிரியாணி கடைக்கு சென்ற இருவர் புரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டதாகத் தெரிகிறது. உடனடியாக ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களுக்கு வேண்டியதை தர முற்பட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆத்திரமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அதில் ஒருவர் கத்தியால் ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை தாக்கியுள்ளார். இதனால் பதற்றமைந்த கடையின் ஊழியர்கள் உடனடியாக உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் தகராறில் ஈடுபட்டவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கரீம் மற்றும் சமீர் என்பது தெரியவந்தது. பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!