அண்ணாமலை மன்னிப்பு கேட்க அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கோரிக்கை
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
பாஜகவின் கரூரை சேர்ந்த அண்ணாமலை நான் கோட்டாவில் வந்ததாகவும், எனது அப்பா கல்லூரியில் சீட்டு வாங்கி தந்ததாகவும் மறைந்த என் தந்தை பற்றி பேசியுள்ளார். அது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு 15 வயது இருக்கும் போது என் தந்தை இறந்துவிட்டார். அண்ணாமலைக்கு தகர டப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால் எனக்கு அதற்கு கூட அப்பா இல்லை. அண்ணாமலை கீழ்த்தரமாக தவறாக பேசியுள்ளார். அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்ட வேண்டும். என் அப்பா இறந்தபோது என்னிடம் கூட காசு இல்லாமல் கடன் வாங்கி தான் அவருக்கு காரியம் செய்தேன். அப்பா மறைவிற்கு பிறகு என் அம்மா தான் என்னை கஷ்டபட்டு வளர்த்தார். என் அம்மா இல்லை என்றால் நான் இல்லை. இறந்த ஒருவரை பற்றி அண்ணாமலை பொய்யான தகவல் பரப்பி வருகிறார்.
குஜராத்தில் படித்து மெடல் வாங்கி உள்ளேன். திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் வாங்க ஆக்கபூர்வமான கோவை வளர்ச்சி பற்றி பேசலாம் என்று தான் அழைத்தேன். அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி சுகாதாரத்தில் இந்தியாவில் 42-வது இடத்தில் இருந்தது. திமுக ஆட்சி வந்த பிறகு 180 இடத்திற்கு சென்றுவிட்டது. திமுக ஆட்சியில் பொய்யாக அதிகளவில் வழக்குகள் போடுகிறார்கள். போதை பொருள் என்பது தவறான செயல். போதை பொருள் ஆண், பெண் வித்தியாசம் தெரியாமல் அதிக தப்பு செய்ய தூண்டிவிடுகிறது. கஞ்சா, கஞ்சா சாக்லெட், மாத்திரை, போதை பொருள் ஆகியவற்றின் பயன்பாடு திமுக ஆட்சியில் பெருக்கி உள்ளது.
அதிமுக ஆட்சியில் கோவை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.ஆனால் திமுக ஆட்சியில் வளர்ச்சி அடையாமல் கோவை பின் தங்கியுள்ளது. ஊழல் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும், மோடிக்கு அருகதை கிடையாது. தேர்தல் பத்திரம் மூலம் 6000 கோடி வாங்கி உள்ளார்கள்.திமுகவினர் அதே நபரிடம் காசு வாங்கி உள்ளனர். 33 மாதம் ஆட்சி காலத்தில் திமுக ஒன்றும் செய்யவில்லை. பாஜக, திமுகவும் ஊழலை பற்றி பேச கூடாது. மோடி கோவையில் என்ன சாதனை செய்தார்? கோவை சாதனைகளை விட்டுவிட்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் அஞ்சலி செய்து அரசியல் செய்கிறார்கள். அந்த சம்பவத்தை நாங்கள் மறக்க நினைக்கிறோம். ஆனால் பாஜகவினர் அதனை நினைவுபடுத்துகிறார்கள்.
கோவை மக்கள் யாரும் போய் உதயநிதியை பார்க்க முடியுமா?இல்லை அண்ணாமலையை தான் பார்க்க முடியுமா?அதிமுகவிற்கும், திமுகவிற்கு தான் போட்டி. அண்ணாமலைக்கு இடம் இல்லை. கோவையில் பாஜக 60% வாக்கு வாங்கினால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். கோவை வளர்ச்சிக்கு நிறைய விஷயங்கள் உள்ளது. அதனை தான் நாம் வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொய் பேசி வருகிறார். பாஜக இந்துத்துவா கட்சி, திமுக குடும்ப அரசியல் கட்சி.
இவ்வாறு வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu