கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.94 லட்சத்தில் நகர் நல மைய கூடுதல் கட்டிடங்கள்
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.94 இலட்சம் மதிப்பீட்டில் நகர் நல மையம் கூடுதல் கட்டிடங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டுமானப் பணிகளையும் மேயர் கல்பனா ஆனந்தக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட சுங்கம் நகர் நல மையத்தில் பெங்களுரைச் சேர்ந்தர் HF Interior தொண்டு நிறுவனம் நிதியிலிருந்து ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனையின் கூடுதல் கட்டிடங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்டகட்டுமானப் பணியினையும், தெற்கு மண்டலம் வார்டு எண்.88க்குட்பட்ட குனியமுத்தூர், ரைஸ் மில் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமெரிக்காவில் வசித்து வரும் செந்தில்குமார் ஹேமாகுமார் ஆகியோர் குடும்ப சார்பில் 100 சதவீத பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்டுமானப் பணியினையும், ஆகமொத்தம் ரூ.94 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் துணைமேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், வி.சுமா ,நகர்நல அலுவலர் மரு.பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ், மத்திய மண்டல நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், உதவிபொறியாளர் கனகராஜ், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் ,மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu