கண்காணிப்பு காமெரா பொருத்தப்பட்டுள்ளதால் விபத்துகள் குறைந்துள்ளன

கண்காணிப்பு காமெரா பொருத்தப்பட்டுள்ளதால் விபத்துகள் குறைந்துள்ளன

செய்தியாளகளுக்க பேட்டியளித்த கோவை மாநகர காவல் ஆணையர்

கடந்த 2022 ஆம் ஆண்டு 413 விபத்துகள் நடைபெற்றுள்ளது 2023 ஆண்டு 369 விபத்துகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்

அவிநாசி சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 கிலோ மீட்டர் வேகத் தடுப்பு கேமரா மூலமாக இதுவரை யாருக்கும் சலான் அபராதம் விதிக்கப்படவில்லை என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகர காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகள், அவற்றால் குறைந்துள்ள போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துக்கள் தொடர்பாக செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து நெரிசலுக்காகஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்த பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்த கலந்துரையாடலின் போது கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள், சிக்னல் அகற்றப்பட்டு இருப்பதால் பாதசாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து பவர் பாயின்ட் மூலமாக விளக்கப்பட்டது.செய்தியாளர்கள் தரப்பில் கூறப்பட்ட தகவல்கள் குறிப்புகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு கவனத்தில் கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யு டர்ன் வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது சாலைகளை கடக்க பாதசாரிகள் நின்று செல்ல 30 செகண்ட் அவகாசமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல சுங்கம் பகுதியில் போக்குவரத்தை கண்காணிக்க ஜீரோ வைலன்ஸ் ட்ராபிக்க்காக 13 கேமராக்கள் பொருத்தியுள்ளோம், அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் . அவிநாசி சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு இ- சாலன் போடப்பட்டு வருகிறது.விபத்தை கட்டுப்படுத்த வகையில் இது பொருத்தப்பட்டுள்ளது . கடந்த 2022 ஆம் ஆண்டு 413 விபத்துகள் நடைபெற்றுள்ளது எனவும், 2023 ஆண்டு 369 விபத்துகள் நிகழ்ந்ததாகவும், அதேபோல 2022 ஆம் ஆண்டு விபத்துகளில் 139 இறப்பு நடை பெற்று உள்ளது எனவும், 2023 ஆண்டு விபத்துகளில் 119 இறப்பு விபத்துகள் நடைபெற்று உள்ளது எனவும் தெரிவித்தார்..

Tags

Next Story