கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
X

தற்கொலைக்கு முயன்ற நபர்

மனைவி மற்றும் மனநலம் பாதித்த மகன் ஆகியோருடன் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்திருந்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அதே பகுதியில் உள்ள லோகநாதபுரம் முதலியார் வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகளும், சற்று மனநலம் சரியில்லாத மகனும் உள்ளனர். புவனேஸ்வரி கோவையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஐடி நிறுவனத்திலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி, கடந்த மாதம் ஏழாம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் 18ஆம் தேதி நவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் காதல் திருமணம் செய்தது தெரிய வந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் நான்கு பவுன் தங்க நகை ஆகியவற்றை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குணசேகரன் அவருடைய மனைவி மற்றும் மனநலம் பாதித்த மகன் ஆகியோருடன் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அப்போது அவர் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தி அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது குறித்து அவர் கூறுகையில் தன் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற ஐந்து லட்சம் ரூபாய் பணம் 4 பவுன் தங்க நகை மற்றும் கடையிலிருந்து விற்பனையான ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக்கு சென்ற பணம் ஆகியவற்றை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா