கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி
X

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக பாட்டிலில் டீசலை எடுத்து கொண்டு வந்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். மாற்றுத் திறனாளியான இவர், அப்பகுதியில் ஒரு பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையின் அருகிலேயே ராஜேந்திரன் என்பவரும் கடை வைத்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வியாபாரம் சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மைக்கேல் ராஜ் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மைக்கேல் ராஜ் புகார் அளிக்க வந்தார். அப்போது தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக பாட்டிலில் டீசலை எடுத்து கொண்டு வந்தார். இவரைப் பார்த்த பாதுகாப்பு பணி காவலர்கள் உடனடியாக அந்த டீசல் பாட்டிலை கைப்பற்றினர். பின்னர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து பேசிய அவர், தன்னை தொழில் செய்ய விடுவதில்லை எனவும், லோன் வாங்கப்பட்டு உள்ள வங்கியையும் அரசு மாற்றித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ai based healthcare startups in india