கோவையில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பறிமுதல்; கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது

கோவையில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பறிமுதல்; கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது
X

Coimbatore News- கோவையில் 7 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது (மாதிரி படம்)

Coimbatore News- கோவையில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் போதைப்பொருட்களை புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜ் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், காட்டூர் காவல் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகத்தின் பேரில் அவரிடம் காவல் துறையினர் சோதனை செய்த போது, அவர் 7 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கேரளா மலப்புரத்தை சேர்ந்த முகமத் ரிஸ்வான் (26) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இவரை ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் இருக்குமென காவல் துறையினர் தெரிவித்தனர். இவரது பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் காவல் துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!