பழைய பொருட்கள் குடோனில் கொள்ளை அடிக்க முயன்ற 6 பெண்கள் கைது

பழைய பொருட்கள் குடோனில் கொள்ளை அடிக்க முயன்ற 6 பெண்கள் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள்

குடோனில் உள்ள மூன்று அறைகளை உடைத்து பழைய இரும்பு பொருட்களை ஆறு பெண்கள் திருட முயன்றதாக கூறப்படுகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கம்பியூட்டர் சொல்யூசன் சர்வீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் விஸ்வேஸ்வரன். இவர் கோவை அவினாசி சாலையில் தனது நண்பர் பாலாஜி என்பவருடன் சேர்ந்து குடோனில் பழைய பொருட்களை இருப்பு வைத்து உள்ளார். இந்த நிலையில் குடோனில் உள்ள மூன்று அறைகளை உடைத்து பழைய இரும்பு பொருட்களை ஆறு பெண்கள் திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மேலாளராக பணி புரியும் ஐஸ்வர்யா மற்றும் அங்கு பணி புரியும் நபர்கள் 6 பெண்களையும் பிடித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சந்தியா, முருகாயி, காயத்ரி, ராணி, காயத்ரி, பாத்திமா என்பதும், அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தெரியவந்தது. மேலும் 6 பெண்களும் திருப்பூரில் இருந்து வேலைக்காக கோயம்புத்தூர் வந்து, பின்னர் இரவு கொடிசியா மைதானத்தில் தங்கி உள்ளனர். அதை தொடர்ந்து பழைய இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ள அறை பூட்டை உடைத்து உள்ளே இருந்த இரும்பு பொருட்கள் மற்றும் மின் சாதன பொருட்களை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!