கோவையில் ஒரே மாதத்தில் 570 சைபர் கிரைம் புகார்கள்: விழிப்புடன் இருக்க போலீசார் அறிவுரை
மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றது. நடப்பு ஆண்டில் கடந்த மே 31 ம் தேதி வரை ஐந்து மாதங்களில் 49,912 சைபர் வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் நிதி இழப்பு தொடர்பாக 38,203 வழக்குகளும், 11,709 நிதி சாரா சைபர் குற்றங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பாக 2,147 வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன. குறிப்பாக கோவையில் இத்தகைய சைபர் குற்றங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. நாள்தோறும், ஏராளமான புகார்கள் மாநகர சைபர் கிரைமில் குவிந்து வருகிறது.
இதனிடையே ஜூன் மாதத்தில் மட்டும் 570 புகார்கள் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறைக்கு வந்து உள்ளது. சைபர் குற்றப் பிரிவு பிரிவு போலீசார் இதுதொடர்பாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வெவ்வேறு மாதங்களில் பெற்றப்பட்ட புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.1.5 கோடி பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் கோவை சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்து உள்ளனர்.
ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால் இந்த விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu