கோவையில் கஞ்சா விற்பனை செய்த எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது

கோவையில் கஞ்சா விற்பனை செய்த எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது
X

கோவையில் கஞ்சா விற்பனை செய்த எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது (மாதிரி படம்)

Coimbatore News- கோவையில் கஞ்சா விற்பனை செய்த எலக்ட்ரீசியன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை வடவள்ளி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, மருதமலை அடிவாரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று இருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கல்வீரம்பாளையம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் (24) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல லிங்கனூர் ரோட்டில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து விசாரணை செய்த போலீசார், அவர்களிடம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அறிந்தனர். இதை அடுத்து, வடவள்ளி தென்றல் நகரைச் சேர்ந்த சபரிகிரி (27), தொண்டாமுத்தூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (24), வடவள்ளி காளிதாஸ் நகரைச் சேர்ந்த கோகுல் (27) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் இடம் இருந்து மேலும் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்தும் மொத்தம் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!