கோவையில் 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ; ஒருவர் கைது

கோவையில் 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ; ஒருவர் கைது
X

Coimbatore News- புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது ( மாதிரி படம்)

Coimbatore News- கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்டிக் கடையில் 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதை தடுக்க அடிக்கடி சோதனைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காகித கவரில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரேஸ்கோர்ஸ் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான காவல் துறையினர் பெட்டிக் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பெட்டிக் கடைக்காரர் அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 3 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் போது, போலீசில் மாட்டிக் கொள்வோம் என்பதால் அதனை காகித கவரில் போட்டு நூதனமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!