கோவை அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழா
கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழா ஆவராம்பாளையம் கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது
கோவையில் நடைபெற்ற கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழாவில், அச்சகத்துறையில் தற்போது உள்ள பல்வேறு சவால்கள் குறித்து ஆலோசணை நடைபெற்றது.
கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் 15 வது ஆண்டு விழா ஆவராம்பாளையம் கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது. கோயமுத்தூர் அச்சக சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிறுவன தலைவர் மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களக இந்தியன் வர்த்தக சபை கோவை கிளை முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன், அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி பேராசிரியை லட்சுமி பிரியா, பேப்பர் அண்ட் அலைடு மெர்ச்சண்ட் சங்க தலைவர் வெங்கடேஷ், பாலாஜி கணிணி பயிற்சி மையத்தின் இயக்குனர் வீரநாதன், தன்னம்பிக்கை பேச்சாளர் மதுரை இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் இந்தியாவில் காகித வணிகம் , அச்சுத் துறையின் படிப்பு மற்றும் அதில் உள்ள வேலை வாய்ப்புகள், அச்சுத்துறையில் அடுத்தகட்ட நவீன தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினர் . தொடர்ந்து செய்தியாளர்களிடம் கோயமுத்தூர் அச்சகத்தார் சங்கத்தின் நிறுவன தலைவர் மனோகரன் பேசினார். அப்போது அவர், நலிந்து வரும் அச்சகத்துறையை மீட்க தமிழக அரசு கிளஸ்டர் அமைத்து தர முன்வரவேண்டும் எனவும், மேலும் வங்கிகளில் அச்சகதுறைக்கு கடனுதவிகளில் கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu