பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

ஆட்சியர் கிராந்திகுமார் ஆய்வு

363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 659 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 659 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியில் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் 127 மையங்களில் பொது தேர்வு நடைபெறுவதாகவும், இதில் 15,847 மாணவர்கள், 18,412 மாணவிகளும் தேர்வு எழுதுவதாக தெரிவித்தார். மன அழுத்தம் இன்றி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் கூறியதையும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கோவை மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற 5 ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!