வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு துவங்குகிறது
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது :- தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று (அக்.25) இரவு அல்லது நாளை (அக்.26) காலையில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது, தமிழகம், உள் கா்நாடகம், கேரளம், தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் முதல் டிசம்பா் வரை பெய்யும். ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு (2020) வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28ம் தேதி தொடங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu