ஜூன் 1 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் இல்லை

ஜூன் 1 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் இல்லை
X

பைல் படம்.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் ஜூன் 1 முதல் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை, நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் ஜூன் 1 முதல் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் வாகன நிறுத்தம் செய்து கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்தில் 28.04.2023 முதல் 31.05.2023 வரை மெட்ரோ பயணிகளுக்காக இலவசமாக வாகன நிறுத்தம் வசதி இயக்கப்பட்டது.

இந்த நிலையில், மே மாதம் முடிவடைவதால், ஜூன் 1 முதல் சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி, இனிமேல் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!