மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்..!

மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்..!
X

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் நிவாரண பொருட்களை வழங்கினார்.

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் நிவாரண பொருட்களை வழங்கினார்.

செங்குன்றம் அருகே புள்ளிலையன் ஊராட்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமீபத்தில் வீசிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.கழகம் சார்பில் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்குமாறு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்றத் தொகுதி புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சி புள்ளிலையன் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வி ரமேஷ் மற்றும் கழக மாவட்டப் பிரதிநிதி ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, குடிநீர், போர்வை, பாய் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் ஊராட்சியின் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி கிளைக் கழக செயலாளர்கள் ஆகியோர் புள்ளிலையன் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!