நிக்கோலா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனை!
நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ பகுதியில் இயங்கி வரும் நிகோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 4-வது ஆசிய புத்தக பதிவில் சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு பல்வேறு இலவச தொழில் திறன் மேம்ப்பாட்டு பயிற்சிகளை தந்து வேலை வாய்ப்புகளை அளித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கு தொழில் பயிற்சிபெற்ற 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து.
ஒரு இருசக்கர வாகனத்திற்கு இருவர் வீதம் பத்து நிமிடத்திற்குள் பத்து இருசக்கர வாகனங்களில் உள்ள பாகங்களை தனித்தனியே கழற்றி அதனை மீண்டும் ஒன்றினைத்து இன்ஜினை இயக்கி சாலையில் ஓட்டி காண்பித்தனர். இந்த நிகழ்வை ஆசிய புத்தக பதிவில் இடம் பெறச் செய்து அதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார் , வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் , புழல் சரக காவல் உதவி கமிஷனர் சகாதேவன் , சென்னை மாநகராட்சி 31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு , சமூக சேவகர் பாபு, உட்பட பலரும் கலந்துகொண்டு சாதனை படைத்த தொழில்நுட்ப மாணவர்களை வெகுவாக பாராட்டி வாழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu