தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
X

திருவள்ளூர்,மாதவரம் அருகே கொளத்தூர் பெரியார் நகரில்  நடந்த விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தீயணைப்புத் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதவரம் அருகே கொளத்தூர் பெரியார் நகரில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு தீயணைப்பு வடசென்னை மாவட்டம், மாதவரம் அடுத்த கொளத்தூர், செம்பியம் ஆகிய தீயணைப்பு-மீட்புபணி நிலையத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கொளத்தூர் பெரியார் நகர் விளையாட்டு திடலில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள்த்துறை இயக்குனர் அபாஸ்குமார் ஆணைப்படி, வட மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன் அறிவுறுத்தலின்படி வடசென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.


உதவி மாவட்ட அலுவலர்கள் சூரியபிரகாஷ், முருகன் ஆகியோர் முன்னிலையில் கொளத்தூர் நிலைய அலுவலர் ரமேஷ், செம்பியம் நிலைய அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் நிலைய அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள் உள்ளிட்ட அணைத்து பணியாளர்கள் இணைந்து விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு செய்முறைகள் மூலம் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கொளத்தூர் பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, மாமன்ற உறுப்பினர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றுவட்டார பகுதிகளுக்குச் சென்று விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ai based agriculture in india