பீர் பாட்டிலால் அடித்து கொலை! தூங்கியவரை எழுப்பியதால் விபரீதம்..!

பீர் பாட்டிலால் அடித்து கொலை! தூங்கியவரை எழுப்பியதால் விபரீதம்..!
X
கோயம்பேடு மார்கெட்டில் பீர் பாட்டிலால் அடித்து ஒருவர் கொலை போலீசார் விசாரணை.

கோயம்பேடு மார்க்கெட்டில் பீர் பாட்டிலால் தலையில் அடித்து ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பு.

போதையில் தூங்கி கொண்டிருந்தவரை மாற்றி எழுப்பியதால் நேர்ந்த விபரீதம்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( வயது 48) இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி டிபன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்துவிட்டு கடையில் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது நண்பரை பார்க்க வந்த கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் சக்தி ( வயது 22 ) என்பவர் தனது நண்பரை எழுப்புவதற்கு பதிலாக குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த சேகரை எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், சக்தியை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

குடிபோதையில் இருந்த சக்தி கோபத்தில் அருகில் கிடந்த பீர்பாட்டிலை எடுத்து சேகரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார் இதில் தலையில் பலத்த காயமடைந்து சேகர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து மயங்கினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேகரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த சேகர் இன்று காலை பரிதாபமாக இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தின் பேரில் கோயம்பேடு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி இறந்து போன சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த சக்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் நண்பரை பார்க்க சென்ற இடத்தில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த நபரை மாற்றி எழுப்பியதால் ஆபாசமான வார்த்தைகளால் பேசிய நபரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!