கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்
பிப்ரவரி 18,19-ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை மொத்தமாக முடக்கியது. இந்நிலையில் பிப் 18,19-ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலைமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 18-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu