ரிஷப ராசிக்காரங்க சொன்னா அப்படியே பலிக்குமாம்...

taurus in tamil-- ரிஷப ராசிக்காரங்க, உண்மைதான் பேசுவாங்க, அதனால், அவங்க சொன்னா அப்படியே பலிக்குமாம்.
Taurus in Tamil- ரிஷபம் ராசிக்காரர்களின் பொதுவான பண்புகளை பார்க்கும்போது அவர்கள் சிறந்த மனிதர்களாகவே இருப்பார்கள் என்பது மிகத் தெளிவாக புரிகிறது. தினமும், அந்த நாளுக்குரிய ராசிகளின் பலன்கள் மாறினாலும், ஒரு ராசிக்கு என்ற பொதுவான குண நலன்கள் உண்டு. அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களின் பொதுபண்புகள், அவர்களின் வாழ்க்கை குறித்து இதில் தெரிந்து கொள்ளலாம்.
தோற்றம்
ரிஷப ராசிக்காரர்களின் கைகள் தடித்துக் காணப்படும். கை விரல்கள் சிறியதும், பெரியதுமாக இருக்கும். பெரிய விரலை விட மோதிர விரல் நீண்டு காணப்படும். இவர்களது நாக்கில் உண்மை இருக்கும். எதைச் சொன்னாலும் பலிக்கும்.
சொத்து
இந்த ராசியில் பிறந்தவர் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர், மற்றவரிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துபவர். இதனால் இவர் சுயநலவாதியாக இருக்கிறார். ரிஷப ராசிகாரர்கள் பணக்காரனாக முடிவதில்லை.
வெற்றி வாய்ப்பு
இறுதியில் இவர் இறை கருணையால் நினைத்த காரியங்களை வெற்றியோடு முடிப்பார். மக்களின் நடுவில் நற்பெயருடன் இருப்பார். கடவுள் நம்பிக்கையுடன் அனைத்து காரியங்களையும் வெற்றியுடன் முடிப்பார்.
விருப்பங்கள்
இந்த ராசிகாரார்களின் பொழுது போக்கு புத்தகம், படித்தல், விளையாடுதல், நல்ல பொருட்களை உருவாக்குதல், பாடுதல், கதை எழுதுதல் இவற்றில் எதை செய்தாலும் அதில் நினைவு கூர்நது செய்வர். ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவராகவும், ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் ஆடைகளை அழகுபடுத்துவதில் ஆர்வம் உள்ளவராக இருப்பர்.
தொழில்
இந்த ரிஷப ராசிக்காரர்களின் தொழில் அவர் அவர் பிறந்த தேதியைக் கொண்டு தான் தொழில் செய்ய வேண்டும். இருந்தாலும் துணி வியாபாரம் செய்தால் அதிக லாபம் பெறலாம். இந்த ராசிக்காரர்கள் வீரர்களாகவும் இருப்பர்.
குணம்
ரிஷப ராசியில் பிறந்தவர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர். தீய குணங்களின் அடிப்படையான குணம் பேராசை, நற்பண்பில்லாத, தீயகுணங்களை உடையவர், ஐம்புலன்களையும் அடக்க முடியாதவர், கடவுள் நம்பிக்கை, பிடிவாதம், பரந்த மனம், நிம்மதியற்ற மனம், பூமியிலிந்து உருவாக்கப்பட்ட சூட்டைப் போல் இவர்களின் குணம் அமைந்துள்ளது. நற்பண்பில்லாத பிடிவாதம், தீயகுணங்களை உடைய, கற்பனை, ஆசைகளை வைத்துக் கொண்டு இவர்கள் சாதிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்
ரிஷப ராசிகாரர்களின் ராசியான நிறம் நீலம். நாவல்பழ நிறம். இந்த நிறமுடைய ஆடையை அணிவதின் மூலம் இவர்களுக்கு அமைதி நிலவும். வெள்ளை மற்றும் கருநீலம் நன்மை தரும். வெண்மை நிறம் இவர்களுக்கு வெற்றியை தரும். எனவே, இவர்கள் அணியும் ஆடையில் வெண்மை நிறம் அவசியம் இருத்தல் வேண்டும்.
நட்பு
ரிஷப ராசிகாரர்களுடன் ரிஷபம், மிதுனம், மகரம், கன்னி, கும்பம் ராசிகாரர்கள் அன்பான நண்பர்களாவர். கும்ப ராசிகாரர்கள் இவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவர். இவர்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு உண்மையான நண்பராவர். மேஷ ராசிகாரார்களும் இவர்களுக்கு நண்பராகிறார். சிம்ம ராசிகாரர்கள் தொல்லை தரக் கூடியவர்கள். விருச்சக ராசிகாரர்கள் தேளின் தன்மை வாய்ந்தவர். மகர ராசிகாரர்கள் கல்வியில் உயர்ந்த லாபம் தரக்கூடிய நண்பனாவர். சிம்மம், கும்பம் ராசிகாரர்களிடம் அதிக நட்பு கிடையாது- மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிகள் ரிஷப ராசிக்கு நன்மை கிடையாது.
இல்லற வாழ்க்கை
இந்த ராசிக்காரர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். அதேபோல கன்னி ராசி காரர்களுடன் வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் துன்பம் நிலவிக் கொண்டிருக்கும்.
அதிர்ஷ்ட கல்
ரிஷப ராசி நேயர்களுக்கான ராசிக்கல் வைரம். இந்த ராசிக்காரர்களுக்கு துன்பம் நேராமல் இருக்க வைரம் அணிய வேண்டும். இந்த கல்லை வெள்ளை தங்கத்தில் அல்லது வெள்ளியில் வைரக்கல் வைத்து அணிந்தால் சங்கடம் தீரும். வைரக்கல்லை சனிக் கிழமையில் சுப தினத்தில் அணிய வேண்டும்.
வீடு-குடும்பம்
ரிஷப ராசி காரர்களுக்கு நல்ல தாய் தந்தை உள்ளனர். குழந்தைகளின் மனதில் நிறைந்த அன்பும் தைரியமும் நிறைந்திருக்கும் ரிஷப ராசி கன்னி பெண்களுக்கு சுகம் நிறைந்திருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் மற்றவர்களின் பேச்சில் மயங்காதவர். அவரே சந்தோஷத்துடன் மற்றவரையும் சந்தோஷமாக வைப்பவர். இந்த ராசிக்காரர்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தைப் பற்றி யோசனை செய்து, அதற்கான தீர்வு எடுத்து முடிப்பவர். பரம்பரை ஜமீன் தாரரை பார்த்து பயப்படுபவர் மற்றும் தூரம் செல்பவர். குடும்பத்தில் ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறார். பாரம்பரியத்தை பின்பற்றுபவர். வீட்டு விசேஷங்களில் தன்னை தனியாக வைத்தக் கொள்வார். இவர்கள் கம்பீரமாகவும், சக்திசாலியாகவும் இருப்பவர்கள்
அதிர்ஷ்ட எண்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 6 அதிர்ஷ்ட எண்ணாகும். 6ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும். இது தவிர 4, 5, 8ம் ராசியான எண்களே.
பலவீனம்
ரிஷப ராசி நேயர்கள் பயந்த குணம் கொண்டவர். கோபம் மிகுந்தவர். கம்பீரமாக வேலைகளை செய்து முடிப்பார். இவர்களே தான் மகான் என்று எண்ணிக் கொண்டிருப்பார். பின் மற்றவர்களின் நிலையை நினைத்து வேதனைபடுவார். கடவுள் நம்பிக்கை அற்றவர். அவரே தன்னுடைய வேலையை செய்துக் கொள்வர். கஷ்டங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ராமாயணம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றை செவ்வாய் கிழமையில் படித்தல் வேண்டும். சனிக்கு சனிக் கிழமையில் விரதம் இருத்தல் வேண்டும். வெள்ளை ஆடை, அரிசி, பால் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். ஓம் அஹ், அஹி, ஜஷி சூக்கிராய நமஹ என்ற நாமத்தை 16,000 முறை ஜபம் செய்ய வேண்டும்.
பண்பு
ரிஷப ராசிக்காரர்கள் இன்பமாக வாழ வேண்டும் என்பதில் குறியாக இருப்பர். ஆனால் கடின உழைப்பாளியாகவும் இருப்பார்கள். எல்லோரையும் நேசிப்பதால் இவர்களது வாழ்க்கை அமைதியாகவே செல்லும். எதிலும் பொறுமை காட்டுவர். இதனால் இவர்களது வெற்றி தாமதமாகும். ஆனால் நிலையாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வயிற்று உபாதை உண்டு. வாயுக் கோளாறு, சர்க்கரை நோய், பார்வை கோளாறு, தொண்டை முதலிய நோய்களுண்டு. இவர்களுக்கு மாரடைப்பால் இறக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இவர்களுக்கு சுக்கிர திசை நடக்கும் போது எண்ணற்ற நோய்கள் வந்து சேரும். இவர்கள் நோயிலிருந்து தப்பிப்பதற்கு பழம், இளநீர், தக்காளி முதலியவற்றை உண்டு வரவேண்டும்.
அதிர்ஷ்ட நாள்
இந்த ராசிகாரர்களுக்கு சனி மற்றும் புதன் கிழமை உன்னதமான நாள். இவர்களுக்கு இந்த நாட்களில் எந்த காரியமும் வெற்றி உண்டாகும். பவுர்ணமி தினத்தில் வரும் இந்நாட்களில் எந்த காரியமும் செய்தல் கூடாது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu