மநீம கட்சி - கோவை தென் கிழக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் விலகல்.

மநீம கட்சி - கோவை தென் கிழக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் விலகல்.
X
அவ்ளோ பெரிய மகேந்திரனுக்கே அந்த கதி (துரோகி) அப்படின்னா என் கதி?

கோவை தென் கிழக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் இளைஞரணி பொறுப்பில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


கடிதத்தில் நான் கோவை தென் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக ( பொள்ளாச்சி,வால்பாறை ) மக்கள் நீதி மையத்தில் பணியாற்றி வருகிறேன்..தேர்தலுக்குப் பிறகு நமது கட்சியில் நடக்கும் சில நிகழ்வுகள் எனக்கு மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் தருகிறது

எங்கள் மண்ணின் மைந்தரான நம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர் மகேந்திரன் நம் கட்சிக்காக அயராது உழைத்தவர் தன் உடல் உழைப்பிலும் நேரத்திலும் பொருளாதாரத்திலும் அவருடைய பங்களிப்பு நம் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

அத்தகைய நல்ல உள்ளம் கொண்ட எங்கள் மண்ணின் மைந்தரான டாக்டர் ஆர் மகேந்திரனை நீங்கள் துரோகி என்று சொன்னீர்கள். அதனை என்னால் ஏற்க முடியவில்லை. தனது நேரத்தையும் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தந்து கட்சியை பன்மடங்கு வளர்ந்து அவருக்கே இந்த நிலை என்றால் என்னைப் போன்றவர்கள் கதி நாளை என்னவாகும்?

ஆகவே இன்று முதல் கோவை தென் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நான் விலகுகிறேன் என தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்..

Tags

Next Story
why is ai important to the future