ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரோடு அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கம் | Namakkal News Today

Namakkal News Today
X

Namakkal News Today

Namakkal News Today - நாமக்கல் அருகே ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

Namakkal News Today - ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரோடு அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கம்

நாமக்கல்,

நாமக்கல் அருகே ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, சிவியாம்பாளையம் பஞ்சாயத்தில், அயோத்திதாசர் பண்டிதர் கிராம வளர்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் முத்துகாப்பட்டி ரோடு முதல் சிதம்பரப்பட்டி ஆதி திராவிடர் காலனி வரை புதியதாக தார் ரோடு அமைக்கப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், பிடிஓக்கள் பிரபாகரன், செல்வி, திமுக கிளைச் செயலாளர்கள் சரவணன் முத்து, சக்திவேல், மற்றும் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கரூர் - ஈரோடு பாதையில் எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில் சேவை ரத்து: பயணிகள் கவலை..!