வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்து நாமக்கல்லில் விளக்க கூட்டம் | Namakkal News

Namakkal news
X

Namakkal news

Namakkal News - நாமக்கல்லில் வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்து நாமக்கல்லில் விளக்க கூட்டம் | Namakkal News

நாமக்கல்,

நாமக்கல்லில் வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் வருமான வரித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் வருமான வரித்துறையின் புதிய விவாத் சே விஸ்வாஸ் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருமான வரித்துறை ஈரோடு பிரிவு ஜாயிண்ட் கமிஷனர் ஸ்ரீநிவாஸ்கண்ணா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். அப்போது, சமீபத்தில் வருமான வரித்துறையால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகள் தொடர்பான சர்ச்சைகளை விரைந்து தீர்க்க, நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் குறித்து விளக்கி கூறினார். மேலும், வருமான வரி செலுத்துவோர் கணக்குகளை முறையாக பராமரிப்பதன் அவசியம், வரியை குறித்த காலத்தில் செலுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த திட்டம் குறித்த சந்தேகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

முன்னதாக நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்ஸ் அசோசியேசன் தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார். வருமான வரித்துறை ஈரோடு பிரிவு துணை கமிஷனர் மணிகண்டன், ஆடிட்டர்கள் சங்க செலாளர் செல்வராஜூ, நாமக்கல் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் திரளான தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!