தலைவனாகவேண்டும் என்றால் தனி சாமர்த்தியம் வேணுங்க....

Leadership Quotes in Tamil
Leadership Quotes in Tamil

சோனியா காந்தி, மம்தாபானர்ஜி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் பவர்புல் அரசியல் தலைவர்கள்.
ஏங்க...எல்லோரும் தலைவன் ஆகி விடமுடியுமா? ஒரு கட்சி, ஒருஅமைப்பு, ஒரு பிரிவு, ஒரு இயக்கம், ஒரு சங்கம் என்றால் தலைமைப் பண்பினை வகிப்பவர்கள் மற்ற நிர்வாகிகளைவிட தனித்திறமை மிக்கவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் தலைவன் ஆக முடியும். சாதாரணமானவர்களால் தலைவர் ஆகிவிட முடியாது. தனி சாமார்த்தியம்இருக்கணும்.
அது சரி தனி சாமார்த்தியம் என்றால் என்னங்கன்னு நீங்க கேட்கறது காதில் விழுதுங்க... அதுதாங்க அந்த அமைப்பில் வரக்கூடிய உட்பூசலை தன்னுடைய சாமார்த்தியத்தினால் வளராமல் கட்டுக்குள் கொண்டு வருவார். தலைவன் என்பவனுடைய பேச்சுக்கு எதிர்பேச்சு வராத அளவிற்கு அவருடைய பேச்சு நயமாக இருக்க வேண்டும். அனைவரும் அவருடைய பேச்சினை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உள்ளுக்குள்ளேயே உள்குத்து வேலைகள்நடக்க ஆரம்பித்துவிடும். தலைவன் என்பவன் தனது அமைப்புக்குள்ளே ஆதரவாளர்களை சீக்ரெட்டாக ஒவ்வொரு ஆளாக கண்காணிப்பார். அது ரகசியமாகவே இருக்கும்.. இதுபோல் பல பொறுப்புகள் தலைமை ஏற்பவர்களிடம் உண்டு. அதுதாங்க தனி சாமார்த்தியம் வேறொன்றுமில்லைங்க....தலைமைத்துவம் என்பது இயற்கையே உருவாக்கிய ஒரு பதவி, ஒரு எறும்புக் கூட்டத்திற்கு கூட அதை வழிநடத்த ராணி எறும்பு என்று ஒன்று உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். தலைமைத்துவம் என்பது இயற்கையாகவே உருவான ஒரு பதவி.
தலைமைப் பண்பு குறித்த பொன்மொழிகள்...
எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள்.ஒரு விஷயத்தை மட்டும் சிறப்பாகச் செய்யுங்கள்.
மிகச்சிறந்த விஷயங்கள் வியாபாரத்தில் தனி மனிதரால் ஒருபோதும் செய்யப்படுவதில்லை.ஒரு குழுவினரால் செய்யப்படுகின்றது.
பிரச்சனையை சரியாகவரையறுத்துவிட்டாலேசரியாக தீர்வு உங்களிடம் இருக்கும்.
ஒன்றை எளிமையாக மாற்றியமைப்பதற்குஏராளமான கடின உழைப்புத் தேவை.
நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் நீங்கள் எதை செய்ய வேண்டும் என்றுதீர்மானித்த விஷயம் அல்லநீங்கள் செய்யக் கூடாது என்றுதீர்மானித்த விஷயம் ஆகும்.
உங்கள் இதயத்தின் உள்ளுணர்வையும்பின் தொடர தைரியம் வேண்டும்.
உங்களுக்குப் ஆர்வம் இல்லையெனில்உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.
தோல்விக்குப் பயந்தால் வெகுதூரம் நீங்கள்செல்ல மாட்டீர்கள்.
உண்மையான சந்தோசத்தை அடைய ஒரே வழிசிறந்த வேலை எனநீங்கள் நம்பும்வேலையைச் செய்வதாகும்.
உங்களிடம் உள்ளமிகவும் விலைமதிப்பற்ற சொத்துநேரமாகும்.
சிறிதாக தொடங்குங்கள்பெரிதாகச் சிந்தியுங்கள்ஒரே நேரத்தில் பலவிஷயங்களை பற்றிகவலைப்படாதீர்கள்.
தலைமைத்துவம் என்பது மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு பாக்கியமாகும். இது தனிப்பட்ட பேராசைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பல்ல. --மவாய் கிபாக்கி
தலைமைத்துவம் என்பது ஒரு சிந்தனை செய்யும் வழி, ஒரு செயல்படும் வழி மற்றும், மிக முக்கியமாக, ஒரு தொடர்பு கொள்ளும் வழி. --சைமன் சினெக்
ஒரு தலைவருக்கும் ஒரு முதலாளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று மக்கள் கேட்கிறார்கள். தலைவர் வழிநடத்துகிறார், முதலாளி இயக்குகிறார். --தியோடர் ரூஸ்வெல்ட்
தலைமைத்துவம் என்பது சாதாரண நபர்களிடமிருந்து அசாதாரணமான சாதனைகளைப் பெறும் திறனாகும். --பிரையன் ட்ரேசி
ஒரு நல்ல தலைவர், தலைவர் மீது நம்பிக்கை வைக்க மக்களை ஊக்குவிக்கிறார், ஒரு சிறந்த தலைவர் மக்கள் தங்களைத் தாங்களே நம்புவதற்கு ஊக்குவிக்கிறார். --எலினோர் ரூஸ்வெல்ட்
ஒரு மிகச்சிறந்த தலைவர் மிகச்சிறந்த விசயங்களைச் செய்பவர் அல்ல. மக்களை மிகச்சிறந்த விடயங்களைச் செய்ய வைப்பவர். --ரொனால்ட் ரீகன்
ஒரு தலைவர் என்பவர் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அல்லது அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் அமைப்பு முறையை மேம்படுத்த உதவும் ஒருவராவார். --சாம் ஹூஸ்டன்
நீங்கள் ஒரு தலைவராவதற்கு முன்பு, வெற்றி என்பது உங்களை நீங்களே வளர்ப்பதைப் பற்றியது. நீங்கள் ஒரு தலைவராகும் போது, வெற்றி என்பது மற்றவர்களை வளர்ப்பதைப் பற்றியது. --ஜாக் வெல்ச்
எதிர்கொள்ளும் அனைத்தையும் மாற்ற முடியாது. ஆனால் அதை எதிர்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது. --ஜேம்ஸ் ஏ. பால்ட்வின்
ஒரு தலைவர் என்பவர் வழியை அறிந்தவர், அவ் வழியில் செல்பவர், மற்றும் வழி காட்டுபவர். --ஜான் சி. மேக்ஸ்வெல்
முகாமைத்துவம் என்பது விசயங்களைச் சரியாகச் செய்வது, தலைமைத்துவம் என்பது சரியான விசயங்களைச் செய்வது. --பீட்டர் ட்ரக்கர்
ஒரு தலைவர் தலைமைத்துவத்தை பதவியாகவும் சலுகையாகவும் பார்க்காமல் பொறுப்பாகவே பார்க்கிறார். --பீட்டர் ட்ரக்கர்

தலைமைத்துவம் என்பது மக்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்காக அவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டுவருவதாகும். --பில் பிராட்லி
தலைமைத்துவம் பற்றிய மிகவும் ஆபத்தான கட்டுக்கதைகளில் ஒன்று தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பதாகும். --வாரன் ஜி. பென்னிஸ்
விசயங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் மக்களுக்குச் சொல்லாதீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்லுங்கள், அவர்கள் தங்களின் புத்தி கூர்மையால் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். --ஜார்ஜ் எஸ். பாட்டன்
ஒரு ஆட்டால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் படைக்கு நான் அஞ்சவில்லை, ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் ஆடுகளின் படைக்கு நான் அஞ்சுகிறேன். --மாவீரன் அலெக்சாண்டர்
தனக்குக் கீழ் உள்ளவர்களின் வெற்றிகளில் உண்மையான மகிழ்ச்சியை அடையாவிட்டால் எந்தவொரு நபரும் ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியாது. --டபிள்யூ. எச். ஆடென்
தலைமைத்துவத்துக்கான ஒரே நிபந்தனை நீங்கள் நேர்மறையாகவும், அமைதியாகவும், திறந்த மனதுடனும் இருப்பதுதான். --அலெக்சிஸ் ஹண்டர்
தலைமைத்துவத்தின் ஒரு நல்ல குறிக்கோள், மோசமாகச் செயல்படுபவர்களுக்கு நன்றாகச் செயல்பட உதவுவதும், நன்றாகச் செயல்படுபவர்களுக்கு இன்னும் சிறப்பாகச் செயல்பட உதவுவதுமாகும். --ஜிம் ரோன்
இன்று ஒரு வெற்றிகரமான தலைமைக்கு முக்கியமானது அதிகாரம் அல்ல செல்வாக்கு. --கென் பிளான்சார்ட்
முகாமைத்துவம் என்பது வெற்றி எனும் ஏணியில் ஏறுவதற்கான ஆற்றலாகும், ஏணி சரியான சுவரில் சாய்ந்திருக்கிறதா என்பதை தலைமைத்துவம் தீர்மானிக்கிறது. --ஸ்டீபன் கோவி
கல்வியே தலைமைத்துவத்தின் தாய். --வெண்டெல் வில்கி
தலைமைத்துவத்தை உண்மையில் கற்பிக்க முடியாது. அதைக் கற்றுக்கொள்ள மட்டுமே முடியும். --ஹரோல்ட் ஜெனீன்
தலைவர்கள் தோட்டக்காரர்களைப் போன்றவர்கள். தலைவர்களாகிய நாம் நமது சொந்த வெற்றியை அறுவடை செய்வதற்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறையின் வெற்றியை வளர்ப்பதற்கும் பொறுப்பானவர்கள். --சூசன் காலின்ஸ்
ஒரு முகாமையாளர் "எப்படி", "எப்போது" என்று கேட்கிறார், ஒரு தலைவர் "என்ன", "ஏன்" என்று கேட்கிறார். --வாரன் ஜி. பென்னிஸ்

திறமையான தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள். அவர்கள் சோதனை, தவறு மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். --கொலின் பவல்
முகாமைத்துவம் என்பது மக்கள் செய்ய விரும்பாத விசயங்களைச் செய்ய அவர்களைத் தூண்டுவதாகும். அதே சமயம் தலைமைத்துவம் என்பது மக்கள் தங்களால் செய்ய முடியாது என நினைக்கும் விசயங்களைச் செய்ய அவர்களை ஊக்குவித்தலாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்
ஒரு தலைவருக்கு அதிக சகிப்புத்தன்மையும், தோல்வியை ஒப்புக்கொள்ளும் திறனும் ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். --ஜாக் மா
நீங்கள் 100 சிங்கங்கள் கொண்ட ஒரு படையை உருவாக்கி அதன் தலைவர் ஒரு நாயாக இருந்தால், எந்த சண்டையிலும் சிங்கங்கள் நாயைப் போல இறக்கும். ஆனால் நீங்கள் 100 நாய்கள் கொண்ட ஒரு படையை உருவாக்கி அதன் தலைவர் ஒரு சிங்கமாக இருந்தால், எல்லா நாய்களும் சிங்கத்தைப் போல சண்டையிடும். --நெப்போலியன் போனபார்ட்
ஒரு கழுதையால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் கூட்டத்தை விட ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் கழுதைகளின் கூட்டம் மேலானது. --ஜார்ஜ் வாஷிங்டன்
தலைமைத்துவம் என்பது தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, உங்களை அங்கு அழைத்துச் செல்வதற்கான தைரியம், ஒழுக்கம் மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதுமாகும். --ஜார்ஜ் வாஷிங்டன்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu