காலம் உள்ள வரை நீடித்து நிலைத்து நிற்கும் நட்பு பற்றிய கவிதைகள்
![காலம் உள்ள வரை நீடித்து நிலைத்து நிற்கும் நட்பு பற்றிய கவிதைகள் காலம் உள்ள வரை நீடித்து நிலைத்து நிற்கும் நட்பு பற்றிய கவிதைகள்](https://www.nativenews.in/h-upload/2023/02/27/1668854-27-feb-friend-image-12.webp)
நட்பு கவிதைகள்
Friendship Kavithai in Tamil Lyrics
நட்பினை மூன்று வகையாக பிரிக்கலாம். முதலாவது வகை நட்பு உணவை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவை. இரண்டாவது வகை நட்பு மருந்தினை போன்றது. இந்த வகை நட்பு எப்போதாவது தேவை. மூன்றாவது வகை நட்பு நோயை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவையில்லை
நண்பனிடம் நம் பிரச்னைகளை சொல்லும்போது, அவன் நமக்குத்தரும் இனிமையான ஆறுதல் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துன்பம் பாதியாக குறைகிறது. ''நுாறு மருத்துவர்கள் செய்ய முடியாத சிகிச்சையை, ஒரு நண்பன் தரும் 'ஆறுதல்' செய்யும்'' என்றார் கவிஞர் வைரமுத்து.
பழைய திரைப்படத்தில் ஒரு வசனம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம். .''கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்'' ஆபத்து என்று வந்து விட்டால் தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. அதனால் தான் நட்பை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்றார்கள்.
அத்தகைய நட்பை பற்றிய கவிதைகளை இங்கு பார்ப்போம்
நண்பன்.!!
விட்டு கொடுப்பான்..
விட்டு கொடுக்காமல் பேசுவான்..
விட்டு விலகாது இருப்பான்..
நட்பு என்பது
நம் கண்களை விட்டு
ஓடி செல்லும்
கண்ணீர் துளிகள் அல்ல..
என்றுமே நம்
கண்களோடு இருக்கும்
கரு விழிகள்.
![](https://www.instanews.city/h-upload/2023/06/04/1726235-friendship.webp)
எங்கோ பிறந்து
இதயத்தில் இணைந்து
வாழ்வில் பயணிக்கும்
உன்னத உறவு
நட்பு மட்டுமே!
உறவுமுறை தெரியாமல்
முகவரி அறியாமல்
ஒருவர் மேல் நாம் வைக்கும்
நம்பிக்கையின் பெயர் தான்
நட்பு
வாழ்க்கையில்
பணம் பெயர் புகழ் என எதுவும்..
பலருக்கும் கிடைக்கும்!!
ஆனால் உண்மையான நட்பு
சிலருக்கு மட்டுமே கிடைக்கும்!!
வாழ்வில்..
தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும்..
தடம் மாறும் போது தட்டி கேட்பவனும் தான்..
உண்மையான நண்பன்!
எங்கும் தேடாமல் ஆயிரம் சொந்தங்கள்
நம்மை தேடி வரும்..
எங்கு தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நட்பு மட்டுமே!
நல்ல நண்பனின் அன்பு
தொல்லையாக கூட இருக்கலாம்..
ஆனால் அது எப்போதும்
பொய்யாக இருக்காது..
![](https://www.instanews.city/h-upload/2023/06/04/1726242-friendship.webp)
அழுகைக்கு காரணம்
ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால்
சிரிப்புக்கு காரணம்
நண்பன் மட்டுமே..
இன்பம் துன்பம்!
கவலை மகிழ்ச்சி!
ஏக்கம் பரவசம்!
இவை அனைத்தையும் கொடுக்க
நண்பர்களால் மட்டுமே முடியும்..
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உங்களை புரிந்து கொள்ள
நட்பு என்னும் உறவு தேவை..
நல்ல நட்பு என்பது
மகிழ்ச்சியான நேரத்தில்
கை குலுக்குவது மட்டுமல்ல
கஷ்டமான நேரத்தில்
கை கொடுப்பதும்
சில நட்புக்கள் நாம்
எதிர்பார்க்காத நேரத்தில்
கிடைத்து இருக்கலாம்
ஆனால் அவர்களே நம்
வாழ்வில் இழக்க கூடாத
நட்பாகிவிடுகிறார்கள்
சோகங்கள் சுகமாகும்
வலிகள் காணாமல் போகும்
நண்பர்கள் உடன் இருந்தால்..
உறவுகள் பிரிந்து போகலாம் ஆனால்
நல்ல நட்புக்கு பிரிவேது
உறவுகளை விட மிகவும் உயர்ந்தது நட்பு
சாகும் வரை பிரிக்க முடியாதது நல்ல நட்பு
தன் கஷ்டத்தை கடவுளிடம் சொன்னவர்களை விட..
நண்பனிடம் சொன்னவர்கள் தான்
இந்த உலகில் அதிகம்.
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை
ஒளியில்லாத நிலவு போன்றது..
அது இருந்தும் பயனில்லை..
கோபமாக பேசினாலும் அதை கிண்டலாக பேச நண்பனால்
மட்டுமே முடியும்
உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள்.
உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள்.
ஒரு துளி கண்ணீரைத் துடைப்பது நட்பு இல்லை
மறு துளி வராமல் தடுப்பது தான் உண்மையான நட்பு
காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை.
காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு…!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu