பாசமான அண்ணன்-தங்கை அன்பின் உணர்வு பூர்வமான வாசகங்கள் இதோ...
Feeling Brother and Sister Quotes in Tamil
Feeling Brother and Sister Quotes in Tamil
வாழ்க்கையில் அண்ணனுடன் பிறக்கும் தங்கைகள் கொடுத்துவைத்தவர்கள் என்று கூட சொல்லலாம். எல்லா குடும்பத்திலும் இதுபோல்தானா? என கேட்கலாம். எப்படிஇருந்தாலும் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அண்ணன் மேல் பாசம் வைத்த தங்கைகளை காண முடிகிறது.
அதேபோல் நாகரிக காலத்தில் அருகருகே வாழ முடியாவிட்டாலும் தொலை துாரத்தில் இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு வரும்போது பாசம் பொங்கத்தான்செய்கிறது. என்னத்தைச் சொல்ல போங்க... பெரும்பாலும் சொத்து பிரச்னைகளினால் ஒரு சில குடும்பங்களில்இந்த பந்தம் விடுபட்டாலும் பின்னர் பல ஆண்டுகள் கழித்துகூட ஒன்று சேர்ந்துவிடுவதைத்தான் காண்கிறோம்.வைராக்யமுள்ள பெண்கள் இருந்தால் இந்த உறவுகள் ஒட்டவே வாய்ப்பில்லை.. ஆனால் ஒரு சில நேரங்களில் அந்த வைரக்கட்டையினுள்ளும் ஈரம் உள்ளது என்பதை நிரூபிப்பதைப்போல் நடந்தவைகளை மறந்து ஒன்று சேரும் குடும்பங்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆக அண்ணன்-தங்கை பாசம் என்பது சாதாரணமானதுஅல்ல. அது ஒரு ரத்த பந்தம். அதனை அழிக்க எவராலும் முடியாது...
அண்ணன்-தங்கை பாச வாசகங்கள் இதோ....
உடன் பிறக்கவில்லை என்றாலும் உள்ளம் கலந்து உறவானோம்.. உயிரே போகும் நிலை வந்தாலும் இந்த அண்ணன் தங்கை உறவு எப்போதும் நிலைத்திருக்கும்.
ஆயிரம் தான் அவனிடம் சண்டையிட்டாலும், பேசாமல் இருப்பதில்லை.. இருக்கவும் முடியாது.. என் அண்ணனிடம்!!
ஒவ்வொரு தங்கையின் மிகப் பெரிய கர்வம் தனக்கொரு அண்ணன் இருக்கிறான் என்பதே!!
தங்கையும் அன்னையாவாள்.. தன் அண்ணனுக்கொரு துன்பம் நேர்கையில்...
அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கம் உண்டு. எந்த ஆணாவது தன்னை தங்கச்சி என்று அழைக்கமாட்டானா என்று..
தாய்க்கு மேலாக அன்பு காட்ட அண்ணன் என்னும் உறவு இருந்தால் வாழும் காலம் யாவும் சொர்கமே..
Feeling Brother and Sister Quotes in Tamil
Feeling Brother and Sister Quotes in Tamil
அண்ணனுடன் பிறந்த தங்கைகளுக்கு மட்டுமே தெரியும்.. அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று!!
உன்னை நினைக்க பல பேர் இருக்கலாம்.. ஆனால் உன்னைப் பற்றி மட்டுமே நினைப்பது உன் அன்பு தங்கை நானாக மட்டுமே இருப்பேன்!!
எத்தனை உறவுகள் நம்மிடம் சொந்தம் புகுந்தாலும், இரத்த பாசத்தினால் வரும் அண்ணன் தங்கை உறவு என்றுமே உருக்கமானதே!!
பூக்களில் உள்ள நிறங்கள் மாறப்போவதில்லை.. அதன் மனமும் மாறப்போவதில்லை.. அது போலத்தான் நம் உறவும், உணர்வும் என்றும் மாறாது!!
இந்த உலகில் தன்னை ஏமாற்ற நினைக்காத ஆண், தன் அப்பாவிற்கு அடுத்ததாக அண்ணன் தான்..
உலகில் ரசிக்க ஆயிரம் விஷயம் இருந்தாலும் பெண்கள் ரசிக்கக் கூடிய ஒரே விஷயம் அண்ணனின் பாசம் மட்டுமே!!
இரத்த பந்தம் அண்ணன் தங்கை உறவை மட்டுமே நிர்ணயிப்பதில்லை.. இரு உயிர்களின் பாசப் பிணைப்பையே நிர்ணயிக்கிறது!!
உன்னை உயிராக நினைத்து விட்டேன். உயிர் போனாலும் அண்ணா உன்னை மறக்க மாட்டேன்...
தகப்பனை விட தங்கையின் மேல் நூறு மடங்கு பாசம் காட்டுவது, அண்ணன் என்ற உறவால் மட்டுமே முடியும்.
ஆண்டுகள் ஆயிரம் ஆகலாம். ஆனால் அண்ணன் தங்கை பாசம் ஆயுள்வரை மாறாது.
ஒட்டிப் பிறக்கவில்லை.. ஒரு தாய் வயிறும் இல்லை ஆனால் இவற்றை விட மேலானது அண்ணன் தங்கை உறவு (உடன் பிறவா தங்கை)
வாழ்க்கை பயணங்களில் தங்கைகளின் ஜன்னலோர இருக்கைகள் அண்ணன்களே!!
ஒரு ஆண் அழகாகிறான். தனது தங்கைக்கு, தான் தான் தந்தை என்று உணரும்போது..
கோபத்தில் குட்டிப்பிசாசு என்றாலும், எல்லா அண்ணன்களின் மனதிலும் தன் தங்கை தேவதையே!!
மறு பிறவி ஒன்று இருந்தால், உன் உடன் பிறந்த அண்ணனாக பிறக்க வேண்டும். இல்லையேல் உன் மடி தவழும் மகனாய் பிறக்கும் வரம் வேண்டும் என் உயிர் தங்கையே!!
தாயிடம் கூட மறைப்பதற்க்கு சில உண்மைகள் இருக்கலாம். தங்கையிடம் மறைப்பதற்கு பொய்கள் கூட ஒன்றும் இல்லை.
Feeling Brother and Sister Quotes in Tamil
Feeling Brother and Sister Quotes in Tamil
உடன் பிறவாத உன்னை உயிருக்கும் மேலாக நேசிப்பதின் காரணம் இன்னும் புரியவில்லை..
ஒரு தங்கை தன் அண்ணன் மீது காட்டக் கூடிய அதிகபட்ச பாசமே, அவன் மீது காட்டக் கூடிய சண்டையாகத் தான் இருக்கும்.
வெளிக்காட்டிக் கொள்ள முடியாத விலை மதிப்பில்லா பாசம், அண்ணன் தங்கை உறவு!!
ஒவ்வொரு மணித்துளி நேரமும் என்னை சிரிக்க வைக்கும் ஒட்டுமொத்த சந்தோசத்தின் சாயல் நீயே!!! எனக்குள் உயிராய் என் உடன் பிறந்த சகோதரியாய் வாழ்பவள் நீயே!!
உள்ளங்கள் ஒன்றாகி, உறவுகளில் கலந்திருக்கும் உடன் பிறவா நம் உறவுக்கு, இன்றல்ல நாளையல்ல.. என்றென்றும் வாழ்வுண்டு...
Feeling Brother and Sister Quotes in Tamil
Feeling Brother and Sister Quotes in Tamil
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசும் அன்பு.. எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத அன்பு.. அண்ணன் தங்கை உறவுகளிடம் மட்டுமே உண்டு!!
ஆயிரம் முறை சண்டை போட்டாலும், அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் உறவு அண்ணன் தங்கை உறவு மட்டுமே!!
அன்பாய் நீ என்னோடு இருக்கும் வரை எதுவும் என் மனதை காயப்படுத்த முடியாது. உனதன்போடு நிதமும் ஏதோ ஒரு மகிழ்வோடு கடந்திடுமே என் மனம் அழகாய்!!
ஒரு தாய் வயிற்றில் பிறந்தால் மட்டுமல்ல.. உண்மையான பாசம் இருந்தாலும் கூட அண்ணன் தங்கை ஆகலாம்.
அடித்துக்கொள்வது மட்டும் அண்ணன் தங்கை உறவு அல்ல.. எங்களைப் போல் அன்பு செய்யவும் யாரும் இல்லை.. அது தான் அண்ணன் தங்கை உறவு!!
பிறந்த கருவறை வேறாக இருந்தாலும் அன்பெனும் அறையில் ஆயுள் முழுக்க இணைந்திருப்போம்
உன்னால் ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாவம்.. உனக்காக ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாசம். அது தான் என் தங்கையின் உறவு!!
ஒற்றுமையாக இருப்போம் என்றும். அண்ணன் தங்கை உறவாக மட்டும் அல்ல.. உயிராக..
ஆயிரம் தாயின் பாசத்தை தங்கையிடமும், ஆயிரம் தந்தையின் பாசத்தை அண்ணனிடமும் காணலாம்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில், இடைவெளி இல்லாத உறவாய் உயர்த்தி சொல்வதில் என் தங்கையை மிஞ்ச யாரும் இல்லை!!
எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் நமக்கு ஒன்னுன்னா முதல்ல துடிச்சு போறது சகோதர உறவு மட்டுமே
தங்கைகளில்லா வீடு அமைதியாகவே இருக்கிறது தீராத மௌனம் சுமந்து திருமணமாகிச் செல்கையில் அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ அழாமல் நடிக்க அண்ணன்கள் கற்றுக்கொள்கிறார்கள்
அண்ணன் தங்கை உறவென்பது வெறும் கையில் கட்டும் கயிற்றில் வாழ்வதில்லை, அது இதயத்தால் கட்டப்படுவது.
வலிக்காமல் குட்டுவது எப்படி என்பது தந்தைகளுக்கு மட்டுமே தெரியும்... அதுப்போல் வலிக்காமல் வலித்தது போல் நடிக்க அண்ணன்களால் மட்டுமே முடியும்....!!!
படத்தில் சூப்பர் ஹீரோவாக இருப்பதை விட வாழ்க்கையில் நல்ல உடன்பிறப்பாக இருப்பதே சிறந்தது
அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன் "அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு
அண்ணன் தங்கச்சி சண்டங்கரது கடலும் அலையும் மாதிரி எவ்வளவு முயற்சி பண்ணாலும் சேர்த்து வைக்கவும் முடியாது பிரித்து வைக்கவும் முடியாது
அண்ணனின் அன்பு எப்போதும் பாதுகாப்பா இருக்கும் தங்கையின் அன்பு எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்
அம்மாவின் அன்பையும் ! அப்பாவின் பாதுகாப்பையும், ஒரே இடத்தில் பெற முடியுமானால் அது அண்ணனிடத்தில் மட்டுமே.
கூட பிறந்த அக்கா இல்லையேனு ஏங்காத பசங்களும் இல்லை ... கூட பிறந்த அண்ணன் இல்லையேனு ஏங்காத பொண்ணுங்களும் இல்லை..."
அடித்துக் கொள்வது மட்டும் எங்கள் அண்ணன் தங்கை உறவல்ல, எங்களை போல் அன்பு செய்யவும் யாரும் இல்லை அதான் எங்கள் அண்ணன் தங்கை உறவு
விடுமுறை தினங்களில் சைக்கிள் ஓட்ட கற்றுத்தருவாய் முயற்சித்து மணலில் நான் விழுகையில் பாரோடு அணைக்கும் தாயும் நீயே
ஆயிரம் தான் அவனிடம் சண்டையிட்டாலும் பேசாமல் இருப்பதில்லை !! இருக்கவும் முடியாது!!! என் அண்ணனுடன்!!!
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை…
நான் உன்னைபார்த்த பின்புதான் என் வாழ்க்கையை வாழ தொடங்கினேன்.
எது நாள் வரை உனக்காக காத்திருந்திருக்கிறேன்…
மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை,அவர்கள் செய்யும் செயலை பொறுத்து வருகிறது…
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒருநல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்… அதுவே
நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்…!!
விரும்பிய போது விரும்பினேன் என்பதை விட வெறுத்த பிறகும் விரும்பினேன் என்பதே உண்மை…
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- Annan Thangai Quotes in Tamil
- Anna Love Quotes in Tamil
- Sister Quotes Tamil
- sister love kavithai in tamil
- annan thangai kavithai in tamil
- anbu thangai kavithai
- sister tamil kavithai
- sister kavithai
- annan thangai kavithai
- thangachi kavithai
- sentiment brother and sister kavithai in tamil
- sister kavithai in tamil lyrics
- anna thangachi images with quotes in tamil
- brother from another mother quotes in tamil
- sisters day quotes in tamil
- anna thangachi quotes in english
- akka thangachi quotes in tamil
- brothers day quotes in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu