திருவெண்ணெய் நல்லூர் அருகே இளம் பெண் திடீர் மாயம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-08-29 09:24 GMT

திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையம் (பைல் படம்)

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அருள்குறுக்கே பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சத்தியா (வயது 19) இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.அதனால் அதிர்ச்சியடைந்த வீட்டில் உள்ளவர்கள் சத்யாவை பல்வேறு இடங்களில் தேடினர்.

ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலு திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் உதவி ஆய்வாளர் பிரபு வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News