பேருந்து நிலையமா? அல்லது படகு குழாமா?: கேள்வி எழுப்பும் விழுப்புரம் பயணிகள்

எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி அடைவது தொடர்கதையாகி வருகிறது

Update: 2021-11-08 03:36 GMT

படகு குழாமாக மாறிய விழுப்புரம் பேருந்து நிலையம் 

விழுப்புரம் பேருந்து நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியில் கட்டப்பட்டது. அப்போது தமிழகத்திலேயே ஹைடெக் பேருந்து நிலையம் என பேசப்பட்டது, ஆனால் கட்டப்பட்ட சில ஆண்டுகள் மழை அளவு குறைந்து காணப்பட்டாலும், அப்படியே பொழியும் சிறு மழையும் சரியான வடிகால் மற்றும் ஏரி நீர் வெளியேறும் மற்றும் வரத்து வாய்க்கால்கள் வழியே வெளியேறி வந்தன,

இந்நிலையில், காலப்போக்கில் விழுப்புரத்தில் நகராட்சி பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள், ஏரி நீர் வரத்து மற்றும் வெளியேறும் வாய்க்கால்கள் அனைத்தும் நகர விரிவாக்கம் காரணமாக அழிக்கபட்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் விட்டதால், பேருந்து நிலையத்தில் உள்ள நீர் வெளியேற முடிவதில்லை.

தற்போது கடந்த சில ஆண்டுகளாக இயற்கை நல்ல மழை பொழிவை கொடுத்து வருவதால், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பொழியும் மழைநீர் வெளியேற வழியிலாமல், ஏதோ பேருந்து பயணிகள் போல அங்கேயே சில நாட்களுக்கு தங்கியிருந்து, துர்நாற்றம் மற்றும் நோய் பரப்பும் வேலையை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது,

அதுபோன்ற சமயங்களில், மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தற்காலிகமாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற படாத பாடுபடுவது வாடிக்கையான நடவடிக்கை தான், ஆனால் நிரந்தர தீர்வு எப்போ? என அப்பகுதி மக்களும், பேருந்து பயணிகளும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்,

இதற்கு தான் விடை இதுவரை கிடைத்தபாடில்லை. காரணம் நகரத்தில் தயவுதாட்சணயம் இல்லாமல் ஆக்ரமிப்பு பிடியில் உள்ள நீர் வரத்து வாய்க்கால்கள் மற்றும் நீர் வெளியேறும் வாய்க்கால்கள் என்று மீட்கப்பட்டு சீரமைக்கபடுகிறதோ, அன்று தான் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மட்டும் இல்லை விழுப்புரம் நகரத்திற்கே மழைநீரில் இருந்து விடுதலை.

இல்லை என்றால் எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இது மாதிரி தற்காலிக நடவடிக்கை தான் தீர்வு.

Tags:    

Similar News