உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
வருகின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று விழுப்புரத்தில் வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வெளியிட்டார்
விழுப்புரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் -2021 முன்னிட்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், பகுஜன் சமாஜ் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, திமுக முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், காங்கிரஸ் ரமேஷ், அதிமுக சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.