100 நாள் வேலையை இரு நூறு நாளாக்கி கூலியை உயர்த்த வி.தொ.ச. கோரிக்கை
விழுப்புரத்தில் நடந்த வி.தொ.ச.கூட்டத்தில் 100 நாள் வேலையை இரு நூறு நாளாக மாற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வி. அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் கே. சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் 100 .நாள் வேலைக்கு ஏழு மணிக்கு வேலை தளத்திற்கு வரவேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும்,வீட்டுமனை மனைப் பட்டா வழங்கிட சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், 100 நாள் வேலைக்கு பட்ஜெட்டில் 25 ஆயிரம் கோடி நிதியை குறைத்து விட்டு, 73 ஆயிரம் கோடியில் நடப்பாண்டு கூலி பாக்கி ஆயிரம் கோடி போக மீதி பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? உடனடியாக துணை நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் தேவையான ரூபாய் 2 .லட்சம் கோடியை ஒதுக்கி,அனைவருக்குமான வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும், ஆண்டுக்கு 100 நாள் வேலையை 200 நாளாக்கி, தினக்கூலி ரூபாய் 600, வேலை செய்த கூலி பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.