விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் சரிசெய்யப்படுமா?

விழுப்புரம் நகராட்சி பகுதியில் கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கும் கோலியனூர் வாய்க்காலை விரைவில் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-07-09 07:43 GMT

குப்பைகள் தேங்கிக் கிடக்கும் கோலியனூரான் வாய்க்கால்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் சிறு மழை செய்தாலே மழை ஆங்காங்கே தேங்கி வெளியேற முடியாத நிலை உள்ளது. விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. அதனை அடிக்கடி நகராட்சி ஊழியர்கள் சரிசெய்தாலும், எந்த ஒரு வாய்க்காலுக்கும் நிரந்தர தீர்வு எட்ட முடியாத நிலையே நகராட்சி முழுவதும் உள்ளது.

இந்நிலையில் திடீர் திடீரென மழை பெய்கிறது, மேலும் இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது, அதனால் விழுப்புரம் நகராட்சி பகுதியில் இருந்து கோலியனூர் வரை செல்லும் கோலியனூரான் வாய்க்கால் அடிக்கடி  தூர்வாரப்பட்டாலும்  நிரந்தர தீர்வு எட்ட முடியவில்லை. இதற்கு காரணம் வாய்க்கால் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு என சொல்லப்படுகிறது

இந்நிலையில் மீண்டும்  தேசிய நெடுஞ்சாலையில் ஆனந்தா மருத்துமனை அருகில் உள்ள இந்த கோலியனூராயன் வாய்க்காலில் அதிக குப்பைகளை போட்டு அடைப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வழியாக செல்லும் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் இதனை கண்கூடாக பார்த்தும் இதை சரி செய்ய முன்வருவது இல்லை, இதனால் அந்த பகுதியில் சாக்கடை தண்ணீர் போகாமல் தேங்கி நிற்கின்றது,

விழுப்புரம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் உள்ள வாய்கால் பகுதியில் இருந்து பாண்டி மேம்பால வரை அடைப்பு இருந்து வருகிறது, இதனால் கழிவுநீர் செல்லமுடியவில்லை. அதனை சரி செய்ய யாரும் முன் வரவில்லை. பெயரளவுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதை சரி செய்கிறனர். அதனால் சாக்கடை தண்ணீர் முழுமையாக வெளியேறுவதில்லை. ஒரு சில நாட்கள் கழித்து வழக்கம் போல  கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அதிக அளவு சேர்ந்து கழிவுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுவதால்  துர்நாற்றம் வீசி வருகிறது. 

பருவ மழை காலம் வருவதற்கு முன் அதை தூர்வாரினால் மட்டும் தான் தண்ணீர் வடிகால் சரியாக செல்லும், ஆகையால் உடனடியாக கால்வாய் தூர்வாரி சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். 

ஜூலை 8-ந்தேதி மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்  சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் காலை 7 மணி முதல் நகராட்சி பகுதியில் பல்வேறு வார்டுகளில் ஆய்வு செய்தனர். இது மாதிரி ஆய்வுகள் கண் துடைப்பாக இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி பகுதியில் வாழும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News