விழுப்புரம் மாவட்ட சிபிஎம் செயலாளராக என்.சுப்பிரமணியன் தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சிபிஎம் மாநாட்டில் மாவட்ட செயலாளராக என்.சுப்பிரமணியன் இன்று தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 18,19 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மல்லிகை மஹாலில் எம்.சின்னப்பா நினைவரங்கத்தில் நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட 23-வது மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி குமார் தலைமை தாங்கினார்,
மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து,தொடக்க உரையாற்றினார்,
பின்னர் மாநாட்டில் என்.சுப்பிரமணியன் புதிய மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார், மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், 35 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடுகளை இழந்த இடிந்து பொதுமக்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தை மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மாற்றுத்திறனாளிகள் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களை100 நாளை 200 நாளாக உயர்த்தி, கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், மாவட்டத்தில் நீண்டகாலமாக அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து இலவச பட்டா வழங்க வேண்டும், கோட்டகுப்பம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக அரசு செய்து கொடுக்க வேண்டும்,
திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், தென்பெண்ணையாற்றில் உடைந்த தளவானூர் தடுப்பணையை மீண்டும் அதே இடத்தில் தரமான முறையில் கட்ட வேண்டும், மேலும் பழுதடைந்துள்ள எல்லீஸ்சத்திரம் அணியை புதுப்பிக்க வேண்டும், மயிலம் ஒன்றியத்தை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும், மேல்மலையனூரில் அரசு கலை கல்லூரி அரசு தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது