விழுப்புரத்தில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

Update: 2022-06-30 15:11 GMT

விழுப்புரத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (30.06.2022) ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்காள் ஒருங்கிணைப்பு மற்றும் கணிகாணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர்கள் ச.சிவக்குமார்,  ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு துணைத்தலைவர், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்ட வளர்ச்சிக்கான மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுத்தலைவர் ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளுர் தொகுதி மேம்பாடு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராம திட்டம், பிரதம மந்திரி முன்னோடி கிராம வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராம் ஜோதி யோஜனா கௌசல்யா யோஜனா' திட்டம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அளைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், வேளாளர் திட்டம், தேசிய பயிர்பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம். ஒருங்கிணைப்பட்ட மின் மேம்பாட்டுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய நுண்ணீர் பாசனத்திட்டம், தேசிய வேளாண்மை சந்தை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பிறபிப்பே" பாதுகாப்புச் சட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்ததனர்.

ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்றடையும் வகையில் செயலாற்றிட வேண்டும். அரசு திட்டங்களை கொண்டுவருவதுடன் அதே வேகத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுத்துறை அலுவலர்களிடம் பெறும்பங்கு உண்டு அதை உரிய காலத்தில் சேர்த்திட அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என தெரிவித்துனர்.

வீட்டு வசதி வாரியத்துறை மற்றும் குடிசை மாற்று வாரிய துறையின் மூலம் மத்திய அரசு திட்டமான வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்திட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிப்பதுடன் கூடுதல் கட்டடங்கள் கட்டிட நடயடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், மத்திய அரசு பங்களிப்புடன் நடைபெற்று வரும் அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் தொடர்புடைய துறை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அணைத்து நலத்திட்ட பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்ளவும், நல்ல தரத்துடன் மேற்கொண்டு பணிகனை விரைந்து முடித்திட வேண்டும் என மாவட்ட வார்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் த.ரவிக்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் முனைவர் க.ஸ்ரீநாதா,மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் காஞ்சனா, மாவட்ட ஊராட்சி குழுந்துணைத்தலைவர் ஷீலா தேவி சேரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செவ்வி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News