விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 517 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 517 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.;
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 50,486 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுவரை மாவட்டத்தில் 362 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இன்று மட்டும் 267 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 47,482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 2642 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் மாவட்டத்தில் மீண்டும் வேகமாக கொரோனா உயர்வது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.