விழுப்புரம் வட்டாட்சியர் அதிரடி
விழுப்புரம் வட்டாட்சியர் நகரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்;
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, மேலும் விழுப்புரம் நகரத்தில் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது, இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்போது கொரோனா விதிமுறைகளை மதிக்காமல் பேருந்து நிலையத்தில் கடைகளை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பேக்கரி உட்பட 3 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து எச்சரித்தார்.