கொரோனா விதிமுறைகளை மீறிய அரசுபேருந்துக்கு அபராதம்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்துக்கு விழுப்புரம் வட்டாட்சியர் ரூ.500 அபராதம் விதித்தார்.
விழுப்புரத்திலிருந்து மதகடிப்பட்டு வரை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று விழுப்புரம் புதுச்சேரி மார்க்கமாக சாலைஅகரம் என்ற இடத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு வந்து கொண்டு இருந்தது.
அப்போது விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் அவ்வழியாக வந்தார். திடீரென அந்த பேருந்தை நிறுத்தி கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு முறையாக பின்பற்றபடுகிறதா என சோதனை செய்தார்.
அப்போது முறையான கொரோனா தடுப்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் பயணிகளை ஏற்றி வருவது கண்டறிந்தார். உடனடியாக ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரை எச்சரித்து, கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத அந்த அரசு பேருந்துக்கு ரூ 500 அபராதம் விதித்தார்.