விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சாதனை

News For School Students - விழுப்புரத்தில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-06-28 01:30 GMT

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை வாழ்த்திய சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்.

News For School Students -விழுப்புரம் திரு.வி.க. வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வில் மாணவி சரஸ்வதி 594 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்து உள்ளார். 2-ம், இடத்தை மாணவி அபிநயா, 3-ம் இடத்தை மாணவன் ரேஷிநாத், 4-ம் இடத்தை மாணவி பிரிய வர்தனா (583/600), 5-ம் இடத்தில் மாணவன் வாஞ்சிநாதன் (582/600) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர். 

10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிகபட்சம் மதிப்பெண்களை பெற்ற மாணவி ஐஸ்வர்யா (495/500) முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தில்மாணவி அம்ரூதா (481/500), மூன்றாம் இடத்தில் மாணவி ஜெயவர்ஷினி (476/500), நான்காம் இடத்தில் மாணவி இவாஞ்சிலின் மோனிக்கா (475/500), ஐந்தாம் இடத்தில் மாணவி தாரணி (473/500), லாவண்யா (473/500) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின்சேர்மன் டாக்டர் எஸ். ரவீந்திரன், பொருளாளர் எம். சிதம்பரநாதன், மேளான் டிரஸ்டி ஜி. முத்து சரவணன் ,தாளாளர் எம்.ராஜசேகரன், பள்ளியின் முதல்வர் ஆர். யமுனாராணி, துணை முதல்வர் எம்.சாந்தி, ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவரும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News